சென்னை | கத்தி முனை​யில் வழிப்​பறி: இளைஞர் கைது


சென்னை: தெரு​வில் நடந்து சென்ற​வரிடம் கத்தி முனை​யில் வழிப்​பறி​யில் ஈடுபட்​டதாக இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை சூளை பகுதி​யைச் சேர்ந்​தவர் பாலாஜி (53). இவர் அதே பகுதி காளத்​தி​யப்பா தெரு​வில் நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் பாலாஜியை தாக்​கியதோடு, கத்தி​யைக் காட்டி மிரட்டி அவர் வைத்​திருந்த பணம் மற்றும் செல்​போனை பறித்து​விட்டுத் தப்பினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேப்​பேரி போலீஸார் விசாரணை நடத்தி சூளை குறவன் குளம் பகுதி​யைச் சேர்ந்த கிஷோர்​கு​மார் (32) என்பவரை கைது செய்​தனர். பின்னர், அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி நீதி​மன்​றக் ​காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x