கொடைக்கானலில் போதைப் பொருள் வைத்திருந்த அசாம் பெண் உட்பட 4 பேர் கைது


கொடைக்கானலில் வாகன சோதனையில் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்த அசாம் பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் செவ்வாய்கிழமை (டிச.31) காலை முதலே வருகை புரிந்தனர். இதையொட்டி, போதை பொருள்கள் கடத்தி வருவதை தடுக்க போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, அப்பர் லேக் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.31) மாலை கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 6 கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்தது தெரிந்தது. அதையடுத்து, காரில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதிக்‌ஷா (25), கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரமிஸ் (27), முகமது நாசில் (24), ஜிஷ்ணு (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மெத்தபெட்டமைன் மற்றும் காரை பறிமுதல் செய்து கொடைக்கானல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x