மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடிய இளைஞர் கைது


கோப்புப்படம்

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சார்ஜ் போட்டிருந்தபோது செல்போன்களை திருடிய கன்னியாகுமரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் சிக்னல் தகவல் பரிமாற்ற பிரிவில் பணிபுரிபவர் மாஞ்சி. இவர் தனது நண்பருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தார். முதலாவது நடைமேடையில் உள்ள சார்ஜிங் பாயிண்டில் அவர்கள் தங்களது மொபைல் போன்களை சார்ஜ் போட்டிருந்தனர். அருகிலுள்ள சேரில் அமர்ந்து இருந்த அவர்கள், பயண களைப்பில் தூங்கினர். இதை நோட்டமிட்ட ஒருவர், சார்ஜில் இருந்த செல்போன்களை திருடி தப்பியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் ரயில்வே காவல் எஸ்ஐக்கள் ஜெயபிரிட்டா, கேசன் தலைமையிலான போலீஸார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து செல்போன்களை திருடிய நபரை பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (30) என தெரிந்து. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் திருடரை பிடித்த காவலர்களை ரயில்வே டிஎஸ்பி காமாட்சி பாராட்டினார்.

x