சென்னை: சென்னை பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் ஜெய் சங்கரிடம் (26) அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த அவர், மணிகண்டனை திட்டியுள்ளார். பின்னர், ஜெய்சங்கரின் தந்தையிடம் சென்று மணிகண்டனை கண்டித்து வையுங்கள் என தெரிவித்துள்ளார்.
இதனால், கோபம் அடைந்த ஜெய்சங்கர், தனது நண்பரான ஓட்டேரி பழைய வாழைமா நகரை சேர்ந்த ஐசக் ஜெபகுமார் (26)
என்பவருடன் சேர்ந்து கடந்த 21-ம் தேதி பெரம்பூர் மங்களபுரம் பூங்கா தெரு சந்திப்பில் அமர்ந்திருந்த மணிகண்டனிடம் தகராறு செய்ததோடு, மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஓட்டேரி போலீஸார் ஜெய்சங்கர், ஐசக் ஜெபகுமார் ஆகியோரை கைது செய்தனர்.