பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது


ஆர்.கே.பேட்டை: ஆர்.கே. பேட்டையில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராக்கி குமாரி (40). இவர், நேற்று முன்தினம் மாலை ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது. ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வீராணத்தூரை சேர்ந்த ஞானசேகர் (26). கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஞானசேகரை, காவல் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி பிடிக்க முயற்சித்தார். அப்போது. ஞானசேகர் கத்தியைக் காட்டி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து. ராக்கிகுமாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீஸார் நேற்று ஞானசேகரை கைது செய்தனர்.

x