வேலூர் பாஜக நிர்வாகி கொலை: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கைது


வேலூர்: வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல் குமார், கொலை வழக்கில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், கடந்த டிசம்பர் 16ம் தேதி அன்று, திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டமும் நடத்தினர்.

விட்டல்குமார் கொலைக்கு திமுக பிரமுகரான நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என்பவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பாலா சேட் மகனின் ஓட்டுநர் சந்தோஷ்(26) மற்றும் கமலதாசன் (24) ஆகிய இருவர் நேற்று காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் இருவரையும் ஜனவரி 2ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயகணேஷ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x