சென்னை: சென்னை அண்ணா நகரை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டுநர் பயிற்சிக்காக சேர்ந்திருந்தார். அங்கு திருவேற்காடு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த சித்திரை செல்வம் (37) பயிற்சியாளராக உள்ளார்.
அவர் கார் ஓட்ட சொல்லிக்கொடுப்பதுபோல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சித்திரை செல்வத்தை கைது செய்துவிசாரிக்கின்றனர்.