நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் கொடூரக் கொலை: முகம், உடலை வெட்டி சிதைத்த பயங்கரம்!


நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சாலையில் மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கீழ நத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இன்று வந்தார். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்திலேயே அவரை 7 பேர் கொண்ட கும்பலானது விரட்டியுள்ளது. அவர் உயிருக்கு பயந்து நீதிமன்ற வாசலுக்கு ஓடியுள்ளார். விடாமல் துரத்திய கும்பலானது அவரை நீதிமன்ற வாசலில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்தது. அந்த கும்பல் அவரது கழுத்து, முகம், தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி சிதைத்தது.

அத்துடன் கையையும் காலையும் வெட்டி துண்டாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கு தயாராக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் ஏறி தப்பிச் சென்றது. நீதிமன்ற அலுவல் தொடங்க இருந்த காலை நேரத்தில் வழக்கறிஞர்களும், குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு காவல்துறையினரும் வந்து கொண்டிருந்த போதே இந்த கொடூரக் கொலை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கீழ நத்தத்தில் ஊராட்சி உறுப்பினராக இருந்த ராஜா மணி என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த படுகொலை செய்யப்பட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

x