சென்னை: அடையாறில் போதைப்பொருள் வைத்திருந்த அஸ்ஸாம் மாநில நபர் கைது


சென்னை: அடையாறு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 6 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று (11.12.2024) காந்தி நகர் பேருந்து டிப்போ பின்புறமுள்ள இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெராயின் என்ற போதைப் பொருள் வைத்திருந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அனருல் இஸ்லாம் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 65 பிளாஸ்டிக் குப்பிகளில் மொத்தம் 6 கிராம் எடை கொண்ட ஹெராயின் என்ற போதைப் பொருள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட அனருல் இஸ்லாம், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

x