சென்னை | குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது


சென்னை: சமூக வலைதள பக்கங்​களி​லும், தனியார் செல்​போன் செயலி​யிலும் ஒரு குறிப்​பிட்ட நபர் குழுக்களை ஆரம்​பித்து அதில் குழந்தை​களின் ஆபாசப் புகைப்​படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாக அண்மை​யில் மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலை​யத்​தில் புகாரளிக்​கப்​பட்​டிருந்​தது.

அதன் அடிப்​படை​யில் விசாரணை செய்த போலீஸார் தெலங்​கானா மாநிலம் சென்று, ரங்காரெட்டி மாவட்​டத்​தை சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி (22) என்பவரை கைது செய்​து அழைத்து வந்தனர். பின்னர் வெங்கா ரகுநாத் ரெட்டி போக்சோ சிறப்பு நீ​தி​மன்​றத்​தில் ஆஜர் செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்​.

x