சென்னை | பைக்கில் லிப்ட் கேட்டு வழிப்பறி: சிறுவன் உட்பட 3 பேர் கைது


கலைமணி, மாதவன்.

சென்னை: பைக்கில் சென்ற​வரிடம் லிப்ட் கேட்டு வழிப்​பறி​யில் ஈடுபட்​டதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை பாலவாக்​கம், காந்தி நகர் பகுதி​யில் வசிப்​பவர் பிலிப்ஸ் ராபர்ட்ஸ் (30). கால்​டாக்சி ஓட்டுநராக பணிபுரி​கிறார். இவர் கடந்த 2-ம் தேதி மதியம், வேலை முடித்து, திரு​வான்​மியூர், ஜெயந்தி சிக்னல் அருகே இருசக்கர வாகனத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அப்போது, அங்கு நின்​றிருந்த இளைஞர்கள் இருவர், பிலிப்​ஸின் வாகனத்தை மறித்து லிப்ட் கேட்​டனர்.

இறக்​கப்​பட்ட அவர், இருவரை​யும் தனது வாகனத்​தில் ஏற்றிக் கொண்​டார். பின்னர் சிறிது தூரத்​தில் டைடல் பார்க் சாலை​யில் உள்ள பேருந்து நிறுத்​தத்​தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இரு இளைஞர்​களும் பிலிப்ஸை திடீரென தாக்​கினர். கத்தி முனை​யில் மிரட்டி கழுத்​தில் அணிந்​திருந்த 6 கிராம் தங்கச் செயினை பறித்​துக் கொண்டு தப்பினர்.

பிலிப்ஸ் இதுகுறித்து திரு​வான்​மியூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்படி அக்காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், செயின் பறிப்​பில் ஈடுபட்டது ஆவடி கன்னி​காபுரம் கலைமணி (23), கண்ணகி நகர் மாதவன் (20) என்பது தெரிந்​தது. தலைமறைவாக இருந்த இவர்களை கைது செய்த போலீ​ஸார் உடந்​தையாக இருந்​ததாக 17 வயது சிறு​வனை​யும் கைது செய்​தனர். பின்னர், அவரை அரசு கூர்​நோக்கு இல்லத்​தில் சேர்த்​தனர்.

விசா​ரணை​யில், கைதான கலைமணி மற்றும் மாதவன் ஆகிய இருவர் மீதும் ஏற்கெனவே எழும்​பூர் மற்றும் கடற்​கரை, ரயில்வே காவல் நிலை​யத்​தில் தலா ஒரு ​திருட்டு வழக்கு உள்ளது தெரிய​வந்​ததாக ​போலீ​ஸார் தெரி​வித்​தனர். தொடர்ந்து ​விசாரணை நடைபெறுகிறது.

x