தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 190 கிலோ கஞ்சா பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொட்டலங்கள்

ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 190 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (புதன்கிழமை) பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை அந்நாட்டு கடற்படையினர் ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கரையில் நின்று கொண்டிருந்த ஃபைபர் படகினை சோதனையிட்டனர். சோதனையில், ஏழு பைகளில் சுமார் 190 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா பைகள் தமிழகத்தின் கடற்பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது என கூறப்படுகிறது. மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x