சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த டிச.10 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி. தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.