​சென்னை | கொட்டும் மழையில் மூதாட்​டி​யிடம் நகை பறிப்பு


சென்னை: மயிலாப்​பூரில் கொட்டும் மழையில் மூதாட்​டி​யிடம் நகையை பறித்​துச் சென்ற​வர்களை போலீ​ஸார் தேடி வருகின்​றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்னை மயிலாப்​பூரை சேர்ந்த மூதாட்டி சகுந்தலா (63). இவர், நேற்று முன்​தினம் இரவு 10.30 மணி அளவில் அருகில் உள்ள கடைக்கு சென்று பேரனுக்கு பால் பாட்​டில் வாங்​கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்​டிருந்​தார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்​தில் வந்த நபர்​கள், சகுந்தலா அணிந்​திருந்த 3 பவுன் செயினை பறித்​துக் கொண்டு தப்பினர். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சிறிது தூரம் விரட்​டிச் சென்​றும் கொள்​ளை​யர்களை பிடிக்க முடிய​வில்லை.

இதுகுறித்து, மயிலாப்​பூர் காவல் நிலை​யத்​தில் சகுந்தலா புகார் தெரி​வித்​தார். போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து, முதல்​கட்​டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்​தப்​பட்​டுள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை வைத்து விசா​ரித்து வருகின்​றனர்.

x