கிருஷ்ணகிரி: பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்துப் பேசியதாகக் கூறி, முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமகவினர் கடந்த 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய பாமக மகளிரணிப் பொறுப்பாளர் ராதாமணி, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக திமுக ஒன்றியச் செயலாளர் கோவிந்தன் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராதாமணியை நேற்று கைது செய்தனர்.