கோவை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி பறிமுதல்


கோவை: கோவை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்னை செல்ல விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் கைத்துப்பாக்கி இருந்தது. விசாரணையில் அவர் ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் (40) என்பதும் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்ததும் தெரிய வந்தது. தகவலின்பேரில் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது.

x