அரபிக்கடலில் உள்ள இரண்டு படகுகளில் இருந்து சுமார் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
அரபிக்கடலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த செய்தியை அடுத்து, இன்று இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அரபிக்கடலில் இரண்டு படகுகளில் இருந்து சுமார் 500 கிலோ போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்) கைப்பற்றப்பட்டது.
இரண்டு படகுகளில் இருந்த நபர்களை சுற்றி வளைத்த கடற்படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படகுகளில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றிய போதைப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.