நாமக்கல்: கடன் பிரச்சினையால் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் முதலைப்பட்டி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (58). இவருக்கு சந்திரகலா (52) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். இதனால் கணவன், மனைவி மட்டும் தனியே வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் அவர்களது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயது முதிர்ந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.