நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு: விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை


சென்னை: தமிழ் சினிமாவில் `ஆண் பாவம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா சென்னை சாலிகிராமம், புஷ்பா காலனியில் வசித்து வரும் அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ``கடந்த அக்.31-ம் தேதி, எனது தம்பியின் மனைவி சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

நான், அணிந்திருந்த 4.5 பவுன் தங்க நகையை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு தூங்கினேன். பின்னர், எழுந்து பார்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது. அந்த நகையை கண்டுபிடித்து தரவேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சீதா வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண்ணிடமும் விசாரணை நடக்கிறது.

x