போதைப் பொருள் விற்பனை: முன்னாள் ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் கைது


சென்னை: வேளச்சேரியில் உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் (25)
மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்பனை செய்யும்போது போலீஸார் அவரை கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து விற்பனையில் தொடர்புடைய அவரது கூட்டாளி அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (26) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் செய்த விசாரணையில், இருவரும், 2020-2021ம் ஆண்டுகளில் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளனர்.

ஜெகதீஷ், பேருந்து, ரயில் மூலம் மும்பை, பெங்களூரு உள்ளிட்டபகுதிகளுக்குச் சென்று குறைந்த விலையில் மெத்தம்பெட்டமைன் வாங்கி வந்து ஷாம் சுந்தரிடம் கொடுப்பதும், பின்னர் இருவரும் சேர்ந்து தரமணி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி.நிறுவன ஊழியர்களுக்கு ஒரு கிராம் ரூ.3,500-க்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

x