ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், கருப்பு நிற லாப்ரடோர் ரெட்ரீவர் நாய், மவுண்ட் அபுவின் சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் நடந்து செல்கிறது. இந்த நேரத்தில் ஒரு சிறுத்தை வீட்டின் எல்லைச் சுவரைத் தாண்டி குதித்து நாயின் மீது பாய்கிறது..
வீடியோவில், சிறுத்தை நாயின் கழுத்தை கடித்ததையும், நாய் அதை எதிர்த்து போராட முயற்சிப்பதையும் காணலாம். கடைசியில் வீட்டின் உரிமையாளர் கத்த ஆரம்பித்து கதவைத் திறந்ததும் சிறுத்தை தப்பி ஓடுகிறது. காயம் ஏதுமின்றி தப்பித்த நாய் அந்தப் பெண்ணுடன் மீண்டும் வீட்டிற்குள் செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ வைரலான பின்னர் நடத்தப்பட்டப்ப விசாரணையில், மாலா குமாரி என்பவரின் பணம் செலுத்தும் விருந்தினர் தங்குமிடமாக பயன்படுத்தப்படும் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Shocking incident in Mount Abu as a panther attacks a dog near Forest Eco Lodge.