அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஏமாற்றியவர் கைது


நிலேஷ்

தாம்பரம்: பல்லாவரம், ஜீவா நகர் ஆரியன் தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி (42). இவர் பல்லாவரம் கன்டோன்மென்ட் நிர்வாகத்
தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். அங்கு உயர் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுநராக பணியாற்றும் மகாராஷ்டிராவின், புனேயை சேர்ந்த நிலேஷ் (36) என்பவர் தனக்கு உயர் அதிகாரிகள் பலரை நன்கு தெரியும் என்பதால், பணம் கொடுத்தால் கன்டோன் மென்டில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய ஸ்டெல் லாமேரி, தனது மகனுக்கு அட்டெண்டர் பணி வாங்கி தர ரூ.10 லட்சம் கொடுத்தார். ஆனால், அரசு வேலை வாங்கித் தராமல் போலி பணி நியமன ஆணையை கொடுத்தார். இது தொடர்பாக, ஸ்டெல்லா மேரி போலீஸில் புகார் அளித்தார். பல்லாவரம் போலீஸார் நிலேஷை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

x