700 கிலோ போதை பொருளுடன் வந்த ஈரான் படகு குஜராத் கடல் பகுதியில் பறிமுதல்


குஜராத் கடல் பகுதியில் பிடிபட்ட ஈரான் படகில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி 700 கிலோ போதைப் பொருளை கைப்பற்றினர். படம்: பிடிஐ

போர்பந்தர்: அரபிக் கடலில் சர்வதேச கடல்சார் எல்லை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து குஜராத் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரான் நாட்டு படகு ஒன்று சர்வதேச கடல்சார் எல்லையை தாண்டி உள்ளே வந்தது. அந்தப் படகை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 700 கிலோவுக்கு மேற்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் படகு போர்பந்தருக்கு கொண்டு வரப்பட்டது. அவை மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

x