ஜாபர் சாதிக் மீதான திருட்டு விசிடி வழக்கு தள்ளுபடி


பூந்தமல்லி: திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது, கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியில் திருட்டு விசிடி விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நடைபெற்று வந்தது. முடிவுக்கு வந்த அந்த வழக்கு விசாரணையில், ஜாபர் சாதிக் மீதான குற்றம் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி பூந்தமல்லி குற்றவியல் நடுவர்-2 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

x