குன்றத்தூரில் வீட்டில் வைத்த எலி மருந்தின் நெடி பரவி மகன், மகள் பலி: தந்தை, தாய்க்கு சிகிச்சை


குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34), தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா, இவர்களுக்கு விஷாலினி (6) என்ற மகளும், ஒரு வயதில் சாய் சுதர்சன் என்ற மகன் உள்ளனர்.

எலி தொல்லை காரணமாக, வீட்டில் வைத்திருந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அதனை சுவாசித்த குடும்பத்தினர் நால்வரும் உடல் நலம் பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மகள் விஷாலினி மற்றும் மகன் சாய் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கணவன் மனைவி இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

x