தெருநாய்கள் கடித்து 14 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு: ஆந்திராவில் பரிதாபம்


ஆந்திரப் பிரதேசம்: என்டிஆர் மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்ததில், 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

என்டிஆர் மாவட்டத்தில் பெனுகஞ்சிப்ரோலு பகுதியில் உள்ள மாடல் காலனியில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 14 மாத குழந்தையை தெருநாய்கள் கூட்டமாக தாக்கியுள்ளன. இதனால் அந்த குழந்தை படுகாயமடைந்தது. இதனையடுத்து அக்குழந்தை உடனடியாக நந்திகமவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கடுமையான காயம் காரணமாக அக்குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரியும், தெருநாய்களின் தாக்குதல்களுக்கு முடிவு ஏற்படுத்த கோரியும், பெனுகஞ்சிப்ரோலு பகுதியில் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

சிறுவனின் தந்தை கோபால் ராவ் கூறுகையில், “தெருநாய்கள் கிராமத்தில் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் கிராமத்தில் உள்ள பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட விடாமல் மிகவும் கவலைப்படுகிறார்கள். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்

x