சென்னை | இளைஞரிடம் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


கோப்புப் படம்

சென்னை: சென்னை மண்ணடி பகுதியில் நேற்று முன்தினம் இரவுவடக்கு கடற்கரை சாலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மறித்தனர். அதை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அவரது வாகனத்தை சோதித்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக ரூ.10 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாரிமுனையை சேர்ந்தஷாருக் ராஜா (27) என்ற இளைஞரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

x