ஆவடி: ஆவடியில் உள்ள இந்திய விமானப் படை தள வளாகத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப் படை கீழ்நிலை எழுத்தர்பணிக்கான எல்.டபிள்யூ.சி; சி.எம்.டி.டி. தேர்வுகள் நடைபெற்றன.
தேர்வு எழுத வந்தவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பர்வீன் சர்மா(25) என்பவரது ஹால் டிக்கெட்டில், முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த மகேந்திர பிரதாப்க்கு (21) பதிலாக, பிளஸ் 2 படித்த பர்வீன் சர்மா ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, ஆவடி, இந்திய விமானப் படை தளத்தின் ஜூனியர் வாரன்ட் அதிகாரி சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பர்வீன் சர்மாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.