சென்னை | ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது


சென்னை: ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பணத்தை திருடிய பெண்ணை அமைந்தகரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியை சேர்ந்தவர் ராகேஷ் (37). இவர் அதே பகுதியில் கோவிந்தன் தெருவில் துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அந்நிறுவனத்தில் பணியாற்றும் ரம்ஜான் என்ற பெண் ராகேஷின் அலுவலக அறையில் இருந்து பணத்தை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, ராகேஷ் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரூ.5 லட்சம் பணத்தை திருடியதாக ரம்ஜானை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x