7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்: ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு


ஹோஷியார்பூர்: வகுப்பறையில் 12 வயது மாணவியை தகாத முறையில் தொட்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி 7 ஆம் வகுப்பு மாணவியை மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியின் கலை மற்றும் கைவினை அறைக்கு அழைத்துச் சென்ற ஆங்கில ஆசிரியர், தகாத கருத்துக்களை தெரிவித்ததுடன், தகாத முறையிலும் தொட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கணித ஆசிரியர் மற்றும் தனது பெற்றோரிடம் சிறுமி புகார் அளித்தார். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆங்கில ஆசிரியர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமன்தீப் கவுர் கூறுகையில், தலைமறைவாக உள்ள ஆசிரியரை பிடிக்க தேடுதல் பணிகள் நடந்து வருவதாக கூறினார்.

x