எனது மகனை நரபலி கொடுக்க பார்க்கிறார்: கணவன் மீது மனைவி புகார்


பெங்களூரு: தனது மகனை சூனியத்துக்காக கணவன் பலி கொடுக்க முயற்சிக்கிறார் பெண் ஒருவர் பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குடும்பத்திற்கு செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் எனும் மூடநம்பிக்கையில் ‘குட்டி பூஜை’ என்ற சூனிய சடங்கில் தனது இளம் குழந்தையை நரபலி கொடுக்க கணவன் சதாம் விரும்புவதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் தனது புகாரை ஏற்கவில்லை என பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தப் பெண்ணின் கடிதத்தின்படி, ‘நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சதாமை முதலில் சந்தித்தேன். அவர் தன்னை ஒரு இந்து நபர் என ‘ஆதி ஈஸ்வர்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட போதிலும், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள அவர் என்னை வற்புறுத்தினர். மேலும், “முஸ்லீம் திருமண சான்றிதழில்” வலுக்கட்டாயமாக கையொப்பமிட்டேன். மேலும், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்காக எனது பெயரை மாற்றுமாறு வலியுறுத்தினார். அப்போதிருந்து அவர் என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். நான் கர்ப்பமானபோது, உடல் ரீதியாக தாக்க ஆரம்பித்தார். எங்களுக்கு மகன் பிறந்ததைத் தொடர்ந்து, சதாமின் கொடுமை இன்னும் அதிகமானது.

அவர் எனது மகனை 'குட்டி பூஜை' என்ற சூனியத்தில் பலி கொடுப்பதாக பலமுறை மிரட்டியுள்ளார். இந்த சடங்கை அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் நான் எனது மகனுடன் தும்கூரில் உள்ள என் தாயின் வீட்டிற்கு தப்பிச் சென்றேன். ஆனாலும் அவர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதுடன், எனது தாயையும் அச்சுறுத்தினார்.

சதாம் அடிக்கடி அமானுஷ்ய நடைமுறைகளில் ஈடுபடுவார். அவர் இரவில் மந்திரங்களை உச்சரித்து சூனியம் செய்வார். நான் இது குறித்து முதலில் கேஆர் புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அங்கு எனது புகார் ஏற்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் எனக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன் மற்றும் தாயின் பாதுகாப்புக்கும் உதவ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

x