கூவத்தூரில் இளைஞர் முகத்தைச் சிதைத்து கொடூரக் கொலை!


கல்பாக்கம்: கூவத்தூரில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள முட்புதரில் வேப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (25). இவர், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூவத்தூரில் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள முட்புதரில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகவும் அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் போலீஸாருக்கு இன்று காலை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீஸார், கொலையுண்ட இளைஞரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பிரதீப் என தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரதீப்பை கொடூரமாக கொலை செய்துவிட்டு புதரில் வீசிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

x