தவெக மாநாட்டுக்கு வந்த இளைஞர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு


கோப்புப் படம்

விழுப்புரம்: சென்னை கீழ்பாக்கம் சாமிதாசபுரத் தைச் சேர்ந்தவர் ஸ்டான்லி மகன் சார்லஸ் (32). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் விக்கிர வாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு வந்தார்.

மாநாட்டு திடலில் நேற்று முன்தினம் மாலை 3.10 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி போலீஸார் அவரது குடும்பத்தினருக்கு தகவல்தெரிவித்தனர். இதுகுறித்து சார்ல ஸின் சகோதரி ஜெனிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x