பள்ளியில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; கண்டுகொள்ளாத நிர்வாகம் - பெற்றோர்கள் போராட்டம்


உத்தரப் பிரதேசம்: நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமியை பள்ளி ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனை கண்டித்து அப்பள்ளிக்கு வெளியே பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமியின் தாய் ஊடகங்களுக்கு கடிதம் எழுதி, தனது மகளுக்கு நீதி கிடைக்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அக்கடிதத்தில், ‘அக்டோபர் 4 ஆம் தேதி, எங்களின் 3 வயது குழந்தை பள்ளியில் உள்ள மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பராமரிப்பு ஊழியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெண் ஊழியர் ஒருவர் அறைக்குள் நுழைந்தபோது, ​​​​அந்த நபர் ஜன்னல் வழியாக குதித்து தப்பினார்.

அதன்பின்னர் ஒரு ஆசிரியரால் குழந்தை மீண்டும் வகுப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட எங்கள் குழந்தையின் புகார்களை பள்ளி நிர்வாகம் அலட்சியப்படுத்தியதால், இரண்டு முறை அந்த நபர் எங்கள் குழந்தையை குறிவைத்தார்’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்காததால், இன்று திட்டமிடப்பட்ட பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணிப்பது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி, பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

x