கரூரில் ரேஷன் அரிசி கடத்தி, பதுக்கியவர் கைது: 1 டன் அரிசி, வாகனம் பறிமுதல்


கரூர்: கரூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியவர் கைது. ஒரு டன் அரிசி, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பசுமை நகர் அருகே இன்று (அக். 7ம் தேதி) கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் அரங்கநாதன், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், காவலர்களான இளம் பரிதி, ரமேஷ்குமார், கவுதமன் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 20 வெள்ளை நிற பாலீத்தின் சாக்கு மூட்டைகளில் 1 டன் (1,000 கிலோ) ரேஷன் அரிசியை கடத்தி, பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியாக நாமக்கல்லை சேர்ந்த கணேசனை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தப்பட்ட ரேஷன் அரிசி ஒரு டன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x