திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தொழில் செய்த நைஜீரியர் கைது!


இம்மானுவேல் நான்சோ

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

பனியன் தொழில் நிமித்தமாக, திருப்பூருக்கு நைஜீரிய நாட்டினர் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு திருப்பூர் வரும் நைஜீரியர்கள், உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்து கைது செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், சூசையாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை விசாரித்தனர்.

அவருடைய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், நாமக்கல்லில் இருந்து தினமும் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த இம்மானுவேல் நான்சோ (41) என்பவரை வடக்கு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x