வைகை விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு


கோப்புப் படம்

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே வைகை விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து, காட்டுமன்னார்கோவில் இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்பாலமுருகன்(24), இவர் ராயபுரத்தில் மீன்விற்பனை கடையில்வேலை செய்து வந்தார். காந்திஜெயந்தி விடுமுறைக்காக, சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி, சென்னை எழும்பூரில்இருந்து நேற்று முன்தினம் பகலில் மதுரைக்கு புறப்பட்ட வைகை விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் சைதாப்பேட்டை நிலையத்தை வந்தடைந்தபோது, பாலமுருகனில் கால் நடை மேடையில் மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறும்போது, ‘‘ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததால், இந்த உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. ரயில் படிக்கட்டு அருகே தொங்கியபடி செல்வது, அமர்ந்து செல்வது மிகவும் ஆபத்தானது. இதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்.மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.

x