ரவுடி வசூர் ராஜாவை என்கவுன்டரில் கொல்ல முயற்சி? - தாய் புகார் மனு


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுவை பெற்ற ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி. | படம்: வி.எம்.மணிநாதன். |

வேலூர்: வேலூரைச் சேர்ந்த சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவை என்கவுன்டரில் கொல்ல முயற்சி நடப்பதால் எனது மகன் உயிரை பாதுகாக்க வேண்டும் என அவரது தாய், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலு வலர் சரவணன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

அப்போது, வேலூர் அடுத்த புதுவசூரைச் சேர்ந்த பிரபல ரவுடி யான வசூர் ராஜாவின் தாய் கலைச்செல்வி அளித்த மனுவில், ‘‘எனது மகன் வசூர் ராஜா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவர் அவ்வப்போது சில வழக்குகளுக்காக வேலூர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்.

அப்போது, அவருடன் வரும் காவலர்கள் தீவிரமாக கண்காணிப்பில் இருப்பதால் உறவினர் களோ, தனிநபரோ பேச முடியாது. ஆனால், எனது மகன் மீது சத்து வாச்சாரி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

மேலும், எனது மகனை காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரிக்கும்போது என்கவுன்டர் செய்யப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே, எனது மகனின் உயிரை பாதுகாக்க வேண் டும். அவர் மீது மேலும் பொய் வழக்குகள் பதிவு செய்யாமல் பாதுகாக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், வேலூர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் அளித்துள்ள மனுவில், ‘‘மாநில ஊரக வாழ் வாதார இயக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடவும், பணி யாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக மாவட்ட அலகில் இருந்து ஊதியம் விடுவிக்கவும், அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இருக்கவும், மாலை 6 மணிக்கு மேல் ஆய்வு கூட்டம், காணொலி கூட்டம் நடத்துவதை தவிர்க்கவும் வேண்டும். வருங்கால வைப்பு நிதி காப்பீடு, உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில், ‘‘எனது மகன் குடியாத்தத்தில் உள்ள தனி யார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறான். எனது மகன் பள்ளி கட்டணம் கட்டவில்லை எனக்கூறி வகுப்பில் அனுமதி அளிக்க வில்லை. நாங்கள் பள்ளிக்கு கட்ட வேண்டிய பணத்தை முழு ஆண்டு தேர்வுக்குள் தவணை முறையில் செலுத்தி எனது மகன் கல்வி சான்றை பெற்றுக் கொள்கிறோம். எனது மகனை படிக்க வைக்க உதவி செய்ய வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார்.

வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்துள்ள மனுவில், ‘‘கொணவட்டத்தில் எங்கள் தெருவுக்கு செல்லும் சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’’ என தெரி வித்துள்ளார். அதேபோல், உதவித் தொகை மற்றும் சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 521 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், தென்னாப் பிரிக்காவில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் போட்டி யில் பங்கேற்க உள்ள குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாருதிக்கு தனது விருப்ப கொடை நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வழங்கினார்.

x