அலங்காநல்லூரில் இளைஞர் கொலையில் சிறுவன் மீண்டும் கைது


மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே இளைஞர் கொலையில் சிறுவனை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். கோவில்பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த சிறுவன், ஒரு கொலை வழக்கில் கைதாகி, 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த அச்சிறுவன், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகமுத்து (36) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் வெட்டியும், முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீயிட்டும் நாகமுத்துவை கொலை செய்தார். இது தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் வெளியே வந்த சிறுவனை மீண்டும் கைது செய்தனர்.

x