சிவகங்கையில் வீட்டின் அருகே நின்றிருந்த இளைஞரை, மர்ம கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் நிதிஷ். 24 வயதான இவர் சென்னையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அண்மையில் சொந்த ஊருக்கு அவர் வருகை தந்திருந்தார். நேற்று இரவு தனது வீட்டின் அருகேவுள்ள பெட்டிக்கடை வாசலில் நிதிஷ் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென நிதிஷை சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த நிதிஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது சத்தம் கேட்ட உறவினர்கள் கூடியதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. உடனடியாக நிதிஷின் உறவினர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே முன்பகை காரணமாக 6 பேரும் நிதிஷை வெட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிதிஷின் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வீட்டின் அருகிலேயே இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!
ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!
3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!
குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!