திருவாரூர் அருகே ஆற்றுப்பாலத்தின் அடியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர் மின் கம்பியை தவறுதலாக தொட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மின் கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்குமாறு மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் நெய் விளக்கு தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் முத்து என்கிற மணிமாறன் (33). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.
இவரது வீட்டின் அருகிலேயே ஓடம் போக்கி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த பலரும் ஆற்றுப்பாலத்தில் கீழ் இயற்கை உபாதைகளை கழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது, மணிமாறன் ஆற்றுப்பாலத்தின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த மின் கம்பி ஒன்றை அவர் தவறுதலாக பிடித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும், திருவாரூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மணிமாறனின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!
ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!
3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!
குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!