டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!


கான்பூரில் பள்ளிகளில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை

டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து இன்று உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக டெல்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய வட இந்திய மாநிலங்களில் உள்ள ஏராளமான பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

அந்தந்த மாநில போலீஸார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல்

எனினும் சோதனையின் முடிவில் அது மிரட்டல் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் ரஷ்ய ஐ.பி. முகவரியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வருவது தெரிய வந்துள்ளது.

இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும், அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், தினந்தோறும் இ-மெயில் மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. அதன்படி, இன்று உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் 10 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கான்பூரில் பள்ளிகளில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை

இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

x