இலங்கையில் இருந்து கடல் வழியே ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று காலை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அதில் ராமநாதபுரம் குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட 5,892.15 கிராம் எடையிலான தங்கம் சிக்கியது. அதேபோல சிவகங்கையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 8,060.50 கிராம் கடத்தல் தங்கம் சிக்கியது. இவ்விரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 13.952 கிலோ தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்.
இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடல் வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது என்பதை உறுதி செய்திருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்கத்தைக் கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார், கடத்தல் தங்கம் எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பது உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியவரும்.
இதையும் வாசிக்கலாமே...
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!
கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!
தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!
அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!
கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!