காதலித்த பெண் கைவிட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கொடிகேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (23). அமேசானில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பாலாஜிக்கும், கனகபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது சில நாட்களில் காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பாலாஜி விரும்பினார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் பாலாஜி தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். ஆனால், இந்த திருமணத்திற்கு தன் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று இளம்பெண் கூறியுள்ளார். அத்துடன் வேறு ஒருவரை காதலிப்பதாக பாலாஜியிடம் அந்த பெண் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, விஷமாத்திரையை சாப்பிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த பாலாஜியின் பெற்றோர், சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது தொட்டபல்லாபூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வருடமாக காதலித்த இளம்பெண், திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!
மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!
டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!
பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!