உணவில் சிறுநீர் கழிப்பு, பிறப்புறுப்பில் தேய்ப்பு... பரிமாறும் முன்னர் நட்சத்திர உணவக ஊழியர் நடத்திய வக்கிரம்


ஹியர்ஃபோர்ட் ஹவுஸ் உணகத்தின் உட்புறத் தோற்றம்

அமெரிக்காவின் நட்சத்திர உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை பரிமாறும் முன்னர் அவற்றில் சிறுநீர் கழித்தது, பிறப்புறுப்பு மற்றும் புட்டத்தில் தேய்த்தது, எச்சில் உமிழ்ந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நட்சத்திர உணவகங்கள் என்றாலே அங்கே சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் உள்ளிட்டவை, இதர உணவகங்களைவிட பல மடங்கு உயர்வானது என்பது பொதுவெளி நம்பிக்கையாக இருக்கிறது. அங்கே கொடுக்கும் விலைக்கு ஏற்ப உணவின் தரமும், பரிமாறப்படும் சேவையும் சிறப்பாக இருக்கும் என்பதும் அந்த நம்பிக்கையில் சேரும். ஆனால் அது உண்மையல்ல என்பதோடு, உணவைப் பரிமாறும் ஊழியர்களில் வக்கிரம் பிடித்தவர்களால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட களங்கங்கள் வாடிக்கையாளர் அருந்து உணவில் சேர வாய்ப்பாகிறது என்பது பேரதிர்ச்சி தரக்கூடியது.

ஹியர்ஃபோர்ட் ஹவுஸ் இணையதளத்தில் உள்ள உணவு ரகம் ஒன்று

அண்மையில் அமெரிக்காவின் எஃப்பிஐ அதிகாரிகள் வசம் வித்தியாசமான வழக்கு வந்தது. வக்கிரவாதிகளுக்காக இயங்கும் இணையதளம் ஒன்றில், அமெரிக்காவின் நட்சத்திர உணவகம் ஒன்றில் உணவு ரகங்கள் மீது ஊழியர் ஒருவர் மேற்கொள்ளும் மோசமான நடவடிக்கைகள் அந்த வீடியோக்களில் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோ தளத்தில் பங்கேற்கும் கிரியேட்டர்கள் முதல் பார்வையாளர்கள் வரை சகலரும் வக்கிர நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர்கள். கேவலமான வீடியோக்களின் மத்தியில் இடம்பெற்றிருந்த உணவக வீடியோக்களை எஃப்பிஐ அதிகாரிகள் விசாரிக்கத் தலைப்பட்டனர்.

வாடிக்கையாளருக்கு பரிமாறுவதற்கு முன்பாக அந்த உணவுகளில் முகம் காட்டாத ஊழியர் ஒருவர் தனது பிறப்புறுப்பு மற்றும் புட்டத்தை தேய்க்கிறார். ஊறுகாயில் எச்சில் துப்புகிறார். அசைவ சாஸில் சிறுநீர் கலக்கிறார். இன்னும் கற்பனைக்கும் எட்டாத உவ்வேக் விவகாரங்களை, அப்பாவி வாடிக்கையாளருக்கான உணவின் மீது நிகழ்த்துகிறார்.

அந்த வீடியோவில் அடையாளம் தென்பட்ட உணவு ரகங்கள், அவற்றின் மீதான அலங்காரம் மற்றும் ஊழியர் காலணி ஆகியவற்றின் அடிப்படையில் துப்புத்துலக்கிய புலனாய்வாளர்கள், கன்சாஸில் செயல்படும் ஹியர்ஃபோர்ட் ஹவுஸ் என்ற செல்வந்தர்களுக்கான உணவகத்தை சென்றடைந்தனர்.

ஜேஸ் கிறிஸ்டியன் ஹான்சன்

அங்கே மர்ம ஊழியரின் காலணி புகைப்படங்களை வைத்து, சுலபமாக ஜேஸ் கிறிஸ்டியன் ஹான்சன் என்ற 21 வயது ஊழியரை கைது செய்தனர். இணையத்தில் தான் சந்தித்த வக்கிர நபர்களின் கோரிக்கைக்காக இவ்வாறு வாடிக்கையாளருக்கான உணவுகளில் களங்கம் சேர்த்ததாக ஜேஸ் ஒப்புக்கொண்டார்.

தான் செய்யும் வேலை தனக்கு பிடிக்காததாலும், பணக்காரர்களுக்கான உணவை பழித்ததில் ஒருவகையான திருப்தியை அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமாக சாலமன் மீன் உணவை பரிமாறும் முன்னர் அதில் தனது பிறப்புறுப்பை தேய்ப்பதில் பெரும் திருப்தி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜேஸ் கைதை தொடர்ந்து அங்கே உணவருந்தியவர்களில் 130க்கும் மேற்பட்டோர், காவல்துறையில் தனியாக புகாரளித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

x