மதுரையில் பயங்கரம்... சாக்கடை கால்வாயில் சடலமாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை


கோப்புப்படம்

மதுரையில் ஓடும் கழிவுநீர் கால்வாயில் கிடந்த பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை மரணம்

மதுரை, பெத்தானியாபுரம் குடியிருப்பு பகுதி அருகே செபாஸ்டின் நகர் சர்ச் உள்ளது. அதன் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிமேடு போலீஸார், இறந்த குழந்தையின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரிமேடு காவல் நிலையம்

கழிவுநீர் கால்வாயில் கிடந்தது பெண் குழந்தை என்றும் காலை 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவிக்கவே போலீஸார், அப்பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் விவரம் குறித்தும், சமீபத்தில் பிரசவித்த பெண்களின் விவரம் குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கரிமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

x