ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!


மயங்கி விழும் வாலிபர்

உத்தரப்பிரதேசத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என அதனை தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது இந்தியாவில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் மட்டும் சுமார் 174 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் தான் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த தடுப்பூசிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளின் காரணமாக மாரடைப்புகள் ஏற்படுகிறதா என்கிற கேள்வியும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மருத்துவத் துறையினர் சார்பில் விரிவான விளக்கங்கள் எதுவும் வழங்கப்படாததால் பொதுமக்களிடையே ஒருவித குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் அடுத்தடுத்து மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பல வருடங்களாக உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், இளம் சிறுவர்கள் உள்ளிட்டோர் திடீர் திடீரென உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மாரடைப்பு

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி பகுதியில் வாலிபர் ஒருவர், உடற்பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனக்கு கடுமையாக தலைவலிப்பதாக கூறி தலையில் கை வைத்தபடி உடற்பயிற்சி கூடத்தில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார். திடீரென அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அவருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

x