சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இரண்டு அதிகாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு அதிகாரி மண்டை உடைந்து 6 தையல் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் (GST Central Excise) திருல்லிக்கேணி பிரிவில் பீகாரைச் சேர்ந்த ரஞ்சன் குமார் என்பவர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் ஸ்ரீ அவினாஷ்பாபு ராவ் என்பவர் சூப்ரென்டாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் அலுவலகத்தில் பணி தொடர்பான விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அவினாஷ் அருகில் இருந்த சில்வர் தண்ணீர் பாட்டிலை எடுத்து ரஞ்சன் குமார் தலையில் தாக்கியதில் அவர் காயமடைந்தார். உடனே அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள், அவருக்கு தலையில் 6 தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதல் குறித்து அவினாஷ்பாபு ராவ், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் இருவரிடம் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் இரு அதிகாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!
துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?