திருச்சி மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநரான இவர் உறவினர் மறைவையொட்டி சென்னைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் மனைவி விஜயலட்சுமி, தாய் சாந்தி மற்றும் இரண்டு மகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் தூங்க சென்ற நிலையில், வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புத்தாண்டில் நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?
புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!
ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!
அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!