அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!


கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள்

வாரணாசியில் பல்கலை மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு செய்த வழக்கில் பாஜக ஐ.டி விங்கைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட பாஜக ஐ.டி விங் நிர்வாகி

நவம்பர் 1-ம் தேதி வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது தோழியுடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது ஆள் நடமாட்ட இல்லாத இடத்தில் வரும் போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை பைக்கில் வந்து கடத்திச் சென்றுள்ளனர். இளம்பெண் கூச்சலிட்டது அவரது வாயைத் துணியால் கட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கு அவரது ஆடைகளைக் கலைந்து, வீடியோ எடுத்து மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவி தனது பல்கலைக்கழகத் தோழிகளிடம் கூறினார்.அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது பிரிஜ் என்கிளேவ் காலனி சுந்தர்பூரைச் சேர்ந்த குணால் பாண்டே, ஜிவாதிபூர் பஜார்திஹாவைச் சேர்ந்த அபிஷேக் சவுகான் என்ற ஆனந்த் மற்றும் பஜார்திஹாவைச் சேர்ந்த சக்ஷாம் படேல் என லங்கா எஸ்ஹோ சிவகாந்த் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.

இவர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால் அவர்களை கைது செய்யாமல் போலீஸார் மெத்தனம் காட்டிய நிலையில், பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிதி ராணியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மூன்றுபேரையும் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், குற்றவாளிகளின் அடைக்கலம் அளிக்கும் கட்சி பாஜக என குற்றவாளிகள் மோடி மற்றும் ஸ்மிதி ராணியுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

x